கால் வீக்கம் – கவனம் தேவை

கால் வீக்கம் – கவனம் தேவை

அறிவுறுத்துகிறது கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் (CDF)

 

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் வீக்கம் உண்டாக பல காரணங்கள் உள்ளன.

 1. கிட்னி பாதிப்பால் உண்டாகும் கால் வீக்கம்
 2. இருதய பாதிப்பால் உண்டாகும் கால் வீக்கம்
 3. கல்லீரல் பாதிப்பால் உண்டாகும் கால் வீக்கம்
 4. சில மாத்திரைகளால் உண்டாகும் கால் வீக்கம்
 5. கிருமி தாக்குவதால் நீர் கோர்ப்பதால் உண்டாகும் கால் வீக்கம்
 6. இரத்த குழாய் கோளாறுகள் காரணமாக உண்டாகும் கால் வீக்கம்
 7. நடக்காமல் நீண்ட நேரம் காலை தொங்கப்போட்டு கொண்டு உட்காருவதால் கால் வீக்கம்
 8. தைராய்டு குறைபாடுகளால் உண்டாகும் கால் வீக்கம்

 

 1. கிட்னி பாதிப்பால் உண்டாகும் கால் வீக்கம் : சர்க்கரை நோய் பின்விளைவு காரணமாக கிட்னி பாதிக்கப்பட்டால் கால் வீக்கம், முக வீக்கம், உண்டாகும். கிட்னி உடலில் உள்ள அதிக நீர், மற்றும் உப்பை வெளியேற்றும். கிட்னி செயல்பாட்டில் மாற்றும் இருந்தால் கால் வீக்கம் உண்டாகலாம்.
 2. இருதய பாதிப்பால் உண்டாகும் கால் வீக்கம் : இருதய செயலிழப்பு (திணீவீறீuக்ஷீமீ) அல்லது தசை நார்கள் இயங்காமல் போனாலோ இருதயம் இரத்தத்தை விரைவாக பம்ப் செய்ய முடியாமல் போனாலோ காலில் வீக்கம் உண்டாகலாம்.
 3. கல்லீரல் பாதிப்பால் உண்டாகும் கால் வீக்கம் : கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டாலும், கால் வீக்கம் உண்டாகலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டால் ஆல்புமின் என்ற புரததத்தின் உற்பத்தி குறைகிறது. இதனால் இரத்த குழாய்க்குள் இருக்கும் நீர் இரத்த குழாயிலிருந்து வெளியேறி, சதைகளில் தங்குவதால் கால் வீக்கம் உண்டாகிறது. அதிக சர்க்கரை காரணமாக கல்லீரலும் பாதிக்கப்படலாம்.
 4. சில வகை மாத்திரைகளால் உண்டாகும் கால் வீக்கம் : சர்க்கரையை குறைக்கும் மாத்திரைகளான கிளட்டசோன் மாத்திரைகள் கால் வீக்கத்திற்க்கு முக்கிய காரணமாகும். சிலருக்கு இவ்வகை மாத்திரைகள் இருதய பாதிப்பை உண்டாக்குகிறது. இதனாலும் கால் வீக்கம் உண்டாகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கும் அம்லோடிபின் போன்ற மாத்திரைகளும் கால் வீக்கத்தை ஏற்படுத்தலாம். பொருத்தமில்லாத மாத்திரைகளாலும் கால் வீக்கம் உண்டாகலாம்.

கால் வீக்கம் உள்ளவர்கள் என்ன காரணத்தால் வீக்கம் உண்டானது அதற்கேற்ற சிகிச்சையை மேற்க்கொள்ள மருத்துவ ஆலோசனை அவசியம். கால் வீக்கத்திற்க்கு மருத்துவ ஆலோசனையின்றி நீர் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. கால் வீக்கத்திற்க்கான காரணத்தை கண்டறிந்து கேற்ற சிகிச்சை

Search

+