Prevent Diabetes

 

சர்க்கரை நோயினால் உடலில் பாதிப்பு உள்ளதா அறியும்
சிறப்பு முழு உடல் பரிசோதனை
விளக்கம் அளிக்கிறது கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் (CDF)

90% இரத்தக்குழாய் அடைத்த பின்புதான் மாரடைப்பு, கிட்னி செயலிழப்பு, வாதம், காலிழப்பு, கண் பாதிப்பு உண்டாகிறது. சுமார் 15-20 வருடங்கள் படிப்படியாக இரத்தக்குழாய் அடைக்கப்பட்டு பாதிப்பு உண்டாகிறது. 30 வயது காரருக்கும், 60 வயது காரருக்கும் வித்தியாசம் இரத்தக்குழாய் சுருக்கம், இரத்தக்குழாய் ஆரோக்கியமாக இருந்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். 2 மி.மீ இரத்தக்கட்டி : 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதனின் 2 மி.மீ. அளவிலுள்ள ஒரு சிறிய இரத்தக்கட்டி உயிரிழப்பை உண்டாக்கலாம். திடீரென்றோ படிபடியாகவோ இரத்தக்குழாய் அடைப்பு உண்டானால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு உண்டாகும்.

பாலும் கெட்டு, பால் பாத்திரமும் கெட்டுபோவது போல

இரத்தக்குழாய் கெட்டு அடைப்பு உண்டாதல், இரத்தம் கெட்டு இரத்தம் கட்டியாக மாறுதல். இதில் எந்த மாற்றம் உண்டானாலும் முடிவு ஒன்று தான் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுதல்.

இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட காரணம் :

முதல் முக்கிய காரணம் புகைபிடித்தல் 2. கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை (HbA1c >7.0%) மேல் 3. அதிக இரத்த அழுத்தம் 4. அதிக கொலஸ்ட்ரால் 5. உடல் உழைப்பின்மை 6. அதிக எடை, தொந்தி

உடலுழைப்பு உடற்பயிற்சி இல்லாதிருத்தல்:

எனக்கு சர்க்கரை நோய் இல்லை. இரத்த அழுத்தம் இல்லை. நான் ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் என்று பலர் கேட்கின்றனர்.
இரத்தக்குழாய் ஒரு இரப்பர் பந்து போல சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அதற்கு உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி (வாக்கிங்) செய்யும் போது இரத்தக்குழாயின் சுருங்கி விரியும் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இரத்தக்குழாய் உட்புறத்தில் சர்க்கரை கொழுப்பு அதிகமாக இருந்தாலும் அது பாதிக்காது. கெடாவெட்டு, கல்யாணம் சென்றாலும் வாக்கிங் செல்பவர்களுக்கு அது பாதிக்காது. இரத்தக்குழாய் அடைக்காது.

இரத்த ஓட்டமே உயிர் ஓட்டம்

உடற்பயிற்சி இருதயத்தை பலப்படுத்தும். பூமி சுழலுவது போல இரத்த ஓட்டம் நம் உடலில் நன்றாக இருந்தால் தான் ஆரோக்கிமாக இருக்கலாம். அதை சரி செய்வது உடற்பயிற்சி.

இரத்தம் உறைதல்:

இரத்தக்குழாய் நன்றாக இருந்தாலும் திடீரென்று இரத்தம் உறைந்து விட்டால் மாரடைப்பு உண்டாகும். இரத்தம் உறையும் தன்மை, அதிக சர்க்கரை, அதிக கொலஸ்ட்ரால் காரணமாகவும் நீர்சத்து குறைவதாலும் உண்டாகலாம். (உ.ம்) : 100 இருக்க வேண்டிய சராசரி சர்க்கரை 300 இருந்தால் இரத்தம் உறைந்து கொழ கொழ வென மாறிவிடும். இரத்தம் உறைந்து விடும். இரத்த ஓட்டம் வேகமாக இல்லாமல் மெதுவாக செல்லும் போது இரத்தம் உறையலாம். இதற்கு உடற்பயிற்சி அவசியம். சோம்பி படுக்கையிலேயே கிடப்பவர்களுக்கும், எப்போதும் உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கும் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.

நோய் ஏற்படும் முன் உண்டாகும் பொதுவான அறிகுறிகள் :

உடல் சோர்வு, பகல் நேரத்தில் படுத்துக் கொள்ளலாமா என்று தோன்றுதல், கைகால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி, சாதாரண வேலை செய்தாலே உடல் அசதி, தூக்கமின்மை, படுத்தவுடன் தூக்கம் வருவதில்லை. தூங்கின சிறிது நேரத்திலேயே தூக்கம் கலைந்து விடுவது, தூங்கி எழுந்தவுடன் இன்றும் கொஞ்சம் நேரம் படுத்துக் கொள்ளலாமா என்ற உணர்வு. காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாக இருத்தல், பசியின்மை, பசிக்குது ஆனால் சாப்பிட முடியவில்லை. சாப்பிட்ட பின் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற எண்ணம், வயிறு எரிச்சல், மறதி.

நோய் வந்தபின் ஏற்படும் அறிகுறிகள் :

மூளை :

வாதம், பக்கவாதம், ஒரு பக்கம் கை கால் மறத்துப்போதல், கவனக்குறைவு, மறதி, அடிக்கடி சுயநினைவின்மை, மயக்கம், தலைசுற்றல்.

கண் :

பார்வை மங்குதல், இரட்டை பார்வை, கண்ணில் நீர் வடிதல், அடிக்கடி கண்கட்டி, கண் வலி.

இருதயம் :

நடந்தால் நெஞ்சு வலி, மூச்சு திணறல், நெஞ்சு எரிச்சல், படபடப்பு, இடது தோள்பட்டை, இடது கை வலி.

கிட்னி :

அதிக இரத்த அழுத்தம், பசியின்மை, சிறுநீரில் புரதம் ஒழுகுதல், கால் வீக்கம், முக வீக்கம்.

கால் :

கால் எரிச்சல், மதமதப்பு, குதிகால் வலி, கெண்டை கால் வலி, வீக்கம், கால் நகங்களில் நிறம் மாற்றம், தோல் கருப்பாக மாறுதல், காலில் உள்ள முடிகள் உதிர்ந்து போதல், கால் ஆணி, ஆறாத புண், கணுக்கால் வலி, பஞ்சு மேல் நடப்பது போல் உணர்வு, காலில் கொப்பளங்கள், கால் வெடிப்பு, ஊசி குத்துவது போன்ற உணர்வு, ஏதோ ஒட்டிக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு.

நான் நன்றாக இருக்கிறேன் நான் ஏன் செக்கப் செய்து கொள்ள வேண்டும் :

90% இரத்தக்குழாய் அடைபட்டால் அறிகுறிகள் தெரியும். அதுவரை காத்திருப்பது ஆபத்தானது. வண்டிக்கு சர்வீஸ் உள்ளது. உடம்புக்கு சர்வீஸ் உள்ளதா? நல்லா ஓடுகின்ற வண்டிக்கு சர்வீஸ் செய்கிறோம். நம் உடல் நலத்திற்கு என்ன செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். எல்லா பரிசோதனைகளும் எனக்கு அவசியமா? என்று நினைப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனை பெற்று அவசியமுள்ள பரிசோதனைகளை மட்டும் செய்து கொள்ளலாம். ஏற்கனவே நோய் உள்ளவர்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

3 நாட்கள் CDF மருத்துவமனையில் ஓய்வெடுத்து சிகிச்சை

CDF மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை முகாம், கால் பாதுகாப்பு பரிசோதனை முகாம், மினி ஹெல்த் செக்கப் முகாம் தினமும் நடைபெறுகிறது. அறிகுறிகள் உள்ளவர்கள், அதிக சர்க்கரை உள்ளவர்கள், சிஞிதி மருத்துவமனையில் ஓய்வெடுத்து சிகிச்சை பெற்றால் நல்ல நிவாரணம் கிடைக்கும் . ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு தொடர் சிகிச்சையை திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, சேலம், ஈரோடு, சத்தி, கோபி, ஊட்டி போன்ற கிளை மையங்களில் பெறலாம்.

Search

+