நீங்கள் ok

உங்கள் சர்க்கரை மாத்திரை ok வா?

உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி இருந்தும் உங்கள் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையென்றால் அது உங்கள் குற்றம்  இல்லை. உங்களுக்கு பொருத்தமில்லாத மாத்திரையாக இருக்கலாம் அல்லது மாத்திரை உடலில் வேலை செய்யாமல் இருக்கலாம். இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பல காரணங்களால் சர்க்கரை அதிகமாகலாம்.

1. இன்சுலின் குறைபாடு
2. சுரக்கும் இன்சுலின் வேலை செய்யாதது.
3. இன்சுலினை இயங்காமல் செய்யும் ஹார்மோன்கள் அதிகரித்தல்
4.சில வகை மாத்திரைகளால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகலாம்
5. கணையம் கெட்டுவிடுதல்
6, கணையத்தில் கல் அடைப்பு
காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
ஒருவருக்கு சர்க்கரை நோய் கண்டுபிடிக்கும் போது 50% இன்சுலின் தீர்ந்துவிடும். வருடம்தோறும் 4-6%
இன்சுலின் சுரப்பு குறையும். ஏறத்தாழ10 ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் கேட்காது.
ஒருவருக்கு எவ்வளவு இன்சுலின் சுரக்கிறது என்பதற்கான சிறப்பு பரிசோதனை CDF ல் செய்யப்படுகிறது. இதன் மூலம்
பொருத்தமான மாத்திரைகளை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும்.

பொருத்தமில்லாத சர்க்கரை மாத்திரையின் அறிகுறிகள்:
அடிக்கடி லோ-சுகர், சர்க்கரை ஏறி ஏறி இறங்குதல், உடல் எடை கூடுவது, அசதி, சோர்வு
அதிக பசி, வேலையில் கவனம் செலுத்த முடியாமை.

இன்சுலினை தூண்டும் மாத்திரைகளை கூடியவரை தவிர்ப்பது நல்லது:

போர் போட்டு தண்ணீர் எடுப்பது போல, கணையத்தை தூண்டும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டால் இன்சுலின்
தீர்ந்து போகும். இன்சுலின் ஊசி போடவேண்டிய கட்டாயம் உண்டாகும்.

இன்சுலினை தூண்டாத புதிய அமெரிக்க சர்க்கரை மாத்திரைகள்:
இன்று பல புதிய சர்க்கரை மாத்திரைகள் வந்துள்ளன. இந்த மாத்திரைகள்
கணையத்தை தூண்டாமல் சர்க்கரையை குறைக்கும் தன்மையுள்ளது. லோ சுகர் ஏற்படாது. எடை குறைய உதவுகிறது.

மருத்துவர் ஆலோசனையின்றி தொடர்ந்து ஒரே மாத்திரை சாப்பிடக்கூடாது:
மருத்துவர் ஆலோசனையின்றி நீங்களாக மருந்துக் கடைகளில்
மாத்திரை வாங்கி சாப்பிடாதீர்கள். பல வருடங்கள் ஒரே மாத்திரை சாப்பிட்டால், அது பின்விளைவுகளை உண்டாக்கும்,
நிறைய மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதல்ல.. சிலருக்கு சர்க்கரை நோயை விட சர்க்கரை மாத்திரைகளால் பல பிரச்சனைகள் உண்டாகலாம்.
அதிக மாவுசத்து உணவை சாப்பிடுபவர்களும் உடற்பயிற்சி செய்யாதவர்களும் அதிக மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள்.

சர்க்கரை நோய் மாத்திரைகள் பல வகைப்படும்:

1. இன்சுலினை தூண்டி சர்க்கரையை குறைக்கும் Sulfonylurea மாத்திரைகள்
2. Metformin மாத்திரைகள் :
இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை சரி செய்யும் சிறந்த மாத்திரைகள். சர்க்கரை மாத்திரைகளிலேயே மிகவும் பாதுகாப்பான,
பின்விளைவுகள் இல்லாத மாத்திரைகள்.
3.Alpha-Glucosidase Inhibitor மாத்திரைகள்: இரைப்பையில் உணவு ஜீரணமாவதை தாமதப்படுத்துகிறது. இதனால்
சாப்பிட்டபின் அதிகமாகும்
சர்க்கரையை குறைக்கிறது. பின்விளைவுகள்: வாயு தொந்தரவு, அஜீரண கோளாறு.
4.Glitazone மாத்திரைகள்: Pioglitazone என்று அழைக்கப்படும் மாத்திரைகள், இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை
குறைத்து சர்க்கரையை குறைக்கும். இதன் பின்விளைவுகள் : எடை கூடுதல், கால் வீக்கம், ஈரல் பாதிப்பு உண்டாகும்.
5.SGLT மாத்திரைகள்: இரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை சிறுநீர் வழியாக இந்த மாத்திரைகள்
வெளியேற்றுகிறது. இதனால் சர்க்கரை கனிசமாக குறைகிறது. பின்விளைவு: சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதால், சிறுநீர்
கழிக்கும் இடத்தில் அரிப்பு, பிப்பு, infection உண்டாகலாம்.
6.DPP-4 மாத்திரைகள் : சர்க்கரையை குறைக்க மிக நல்ல மாத்திரை. எடை குறைய உதவும் பின்விளைவுகள் மிக மிக
குறைவு. லோ சுகர் உண்டாக்காது.

விழிப்புணர்வுக்காக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நீங்களாக இந்த மாத்திரைகளை கடையில் வாங்கி சாப்பிடக்கூடாது.
பின்விளைவுகள் உண்டாகும். CDF ல் மிகக்குறைவான மாத்திரைகளே பரிந்துரை செய்யப்படுகின்றன. மாத்திரைகளை
குறைக்க விரும்புபவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அறிகுறிகள், பின்விளைவுகள்
உள்ளவர்கள், 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று பயனடையலாம்.

CDF மருத்துவமனையில் உணவு, உடற்பயிற்ச்சி வாழ்கைமுறையை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. மருதமலை அடிவாரத்தில் 7.5 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. ஒரு
முறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு தொடர் சிகிச்சையை திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை போன்ற
இடங்களில் சிகிச்சை பெறலாம்.