Categories

About CDF

Can I change from Insulin to Tablet

இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாற முடியுமா ?
வழிகாட்டுகிறது கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன்

சர்க்கரை நோயை 2 வகையாக பிரிக்கலாம்.
முதல் வகை சர்க்கரை நோய் மற்றும் இரண்டாம் வகை சர்க்கரை நோய்

முதல் வகை சர்க்கரை நோய்:
சிறுவயதினருக்கு உண்டாவது. முற்றிலுமாக இன்சுலின் சுரப்பு இருக்காது. இன்சுலின் ஊசி போட்டுத் தான் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும்.

இரண்டாம் வகை சர்க்கரை நோய் :
25 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு உண்டாகும். அவர்களுக்கு 2 வகையான குறைபாடு உள்ளது. 1. இன்சுலின் உற்பத்தி குறைவு, சுரக்கும் இன்சுலின் வேலை செய்யாமல் போவது. (Insulin Resistance). சர்க்கரை நோய் கண்டுபிடிக்கும் போது 50% இன்சுலின் குறைந்துவிடுகிறது. ஒவ்வொரு வருடமும் 6% இன்சுலின் குறைகிறது. அப்படி பார்த்தால், 10 ஆண்டுகள் சர்க்கரை உள்ளவர்களுக்கு உடலில் சுரக்கும் இன்சுலின் ஏறத்தாழ முற்றிலும் தீர்ந்துவிடுகிறது. இவர்களுக்கு மாத்திரை கேட்காது.
ஆரம்பகட்டத்தில் 1 மாத்திரையில் கட்டுப்பாட்டில் இருந்த சர்க்கரை, சில வருடங்களில் 5-6 மாத்திரை சாப்பிட்டாலும் கட்டுப்பாட்டில் வருவதில்லை. இந்த கட்டத்தில்தான் இன்சுலின் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் மாத்திரை ஏன் வேலை செய்யவில்லை என்று அறிந்து இன்சுலின் தரப்பட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் மாத்திரைகள் கேட்கவில்லை என்று சிலருக்கு இன்சுலின் தரப்படுகிறது.

சிலருக்கு உணவுமுறை சரியாக கடைபிடிக்காததாலும், சிலருக்கு சரியான நேரத்தில் சாப்பிடாததாலும், சர்க்கரை அதிகமாகிறது. பலருக்கு வாக்கிங், உடற்பயிற்சி செய்யாததால், மாத்திரைகள் கேட்பதில்லை. சிலருக்கு அடிக்கடி வெளியில் சாப்பிடுவதால், மாத்திரைகள் கேட்பதில்லை. இப்படிபட்டவர்களுக்கு இன்சுலின் தேவைப்படாது. ஒருவருக்கு இன்சுலின் பரிந்துரை செய்வதற்கு முன்பாக அவர்கள் உணவுமுறை, உடற்பயிற்சி, போன்ற அடிப்படை விஷயங்களை சரி செய்த பின்னும் சர்க்கரை அதிகமாக இருந்தால் தான் இன்சுலின் பரிந்துரை செய்யப்பட வேண்டும். இன்று இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்களில் 30% மேல் மாத்திரைக்கு மாற்றக்கூடியவர்கள்.
ஒருவருக்கு இன்சுலின் தேவையா? மாத்திரை போதுமா என்பதை

CDF ல் சிறப்பு பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த பரிசோதனை மூலம் உங்களுக்கு எந்த வகை சர்க்கரை நோய் உள்ளது என்பதை அறிய முடியும். நோயின் தன்மை, உடலில் உள்ள அறிகுறிகள், பின்விளைவுகள், HbA1c பரிசோதனை, இரத்த குழாய் அடைப்பு கண்டறியும் பரிசோதனைகள் மூலம் அறியலாம். இதற்கு முழு உடல் பரிசோதனை அவசியம். அவசியம் உள்ளவர்கள் CDF மருத்துவமனையில் 3-5 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவது நல்லது.
1 2 3 10