Importance of Master health checkup

முழு உடல் பரிசோதனை அவசியமா?
தெளிவு தரும் கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன்

ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை நோய்க்கென்று பிரத்யேக முழு உடல் பரிசோதனை செய்தால், பின்விளைவுகளை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் அதிக சர்க்கரை மற்றும் இரத்த குழாய்களை அடைக்கும் நோய். கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையால் உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கப்படலாம்.

இரத்த குழாய்களில் 90% அடைப்புக்கு பின்னரே அறிகுறிகள் மற்றும் உறுப்புகளின் செயலிழப்பு உண்டாகும். இதை தவிர்க்க ஆரம்பத்திலேயே முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். அதற்கு சுமார் 4000 ரூபாய் செலவு பிடிக்கும் என்றால் அவசர சிகிச்சைக்கு ICU வில் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். சர்க்கரை நோயை தவிர, அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், அதிக உடல் எடை, மன அழுத்தம், புகைபிடித்தல், ஆகியவற்றால் இரத்த குழாய் அடைப்பு உண்டாகும். முழு உடல் பரிசோதனை மூலம் இவையனைத்தும் கண்டறியப்படுகிறது.

அதிக சர்க்கரையால் ஏற்படும் அறிகுறிகளும்

அதை தடுக்க செய்ய வேண்டிய பரிசோதனைகளும்.

மூளை :
வாதம், பக்கவாதம், ஒரு பக்கம் கை கால் மறத்துப்போதல், கவனக்குறைவு, மறதி, அடிக்கடி சுயநினைவின்மை, மயக்கம், தலைசுற்றல். கண்:பார்வை மங்குதல், இரட்டை பார்வை, கண்ணில் நீர் வடிதல், அடிக்கடி கண்கட்டி, கண் வலி.

இருதயம் :
நடந்தால் நெஞ்சு வலி, மூச்சு திணறல், நெஞ்சு எரிச்சல், படபடப்பு, இடது தோள்பட்டை, இடது கை வலி.
கிட்னி :
அதிக இரத்த அழுத்தம், பசியின்மை, சிறுநீரில் புரதம் ஒழுகுதல், கால் வீக்கம், முக வீக்கம்.
கால் :
கால் எரிச்சல், மதமதப்பு, குதிகால் வலி, கெண்டை கால் வலி, வீக்கம், கால் நகங்களில் நிறம் மாற்றம், தோல் கருப்பாக மாறுதல், காலில் உள்ள முடிகள் உதிர்ந்து போதல், கால் ஆணி, ஆறாத புண், கணுக்கால் வலி, பஞ்சு மேல் நடப்பது போல் உணர்வு, காலில் கொப்பளங்கள், கால் வெடிப்பு, ஊசி குத்துவது போன்ற உணர்வு, ஏதோ ஒட்டிக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு.

கோவை மையத்தில் executive முழு உடல் பரிசோதனையில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பிரத்யேக பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

கண்Fundus Photo : விழித்திரையை படம் பிடித்தல். கண்ணில் தான் கண்ணாடி போல் இரத்த குழாய் அடைப்பை நேரடியாக பார்க்க முடியும்

சர்க்கரை-HbA1c :சர்க்கரை கட்டுப்பாட்டை அறியும் சிறப்பு பரிசோதனை. இந்த பரிசோதனை அதிநவீன கருவி மூலம் சர்வதேச தரத்தில் செய்யப்படவேண்டும்.

கிட்னி – Microalbumin சிறுநீரகம் ஆரம்ப கட்ட பாதிப்பை அறியும் பரிசோதனை. கணைய பரிசோதனை – கணையத்தின் செயல்பாடு குறைவதால்தான் சர்க்கரை நோய் உண்டாகிறது. கணையத்தின் செயல்பாட்டை அறியும் சிறப்பு பரிசோதனையை CDF ல் செய்யப்படுகிறது. இருதய பரிசோதனை – ECG / ECHO பரிசோதனைகளை நாம் செய்கிறோம் ஆனால் பல இடங்களில் ECG, X Ray மட்டுமே செய்கின்றனர். கால் பரிசோதனை – காலில் நரம்பு பாதிப்பு, இரத்த ஓட்டம் , கால் பாத அழுத்தம் கால் தசை நார்கள் போன்ற சிறப்பு பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

Foot care

காக்க காக்க கால்களை காக்க

அறிவுறுத்துகிறது கோயம்புதூர் டயபடிஸ் பவுண்டேசன் (CDF)

இவ்வுலகில் அதிக மக்களை பாதிக்கக் கூடிய நோயாக சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோயின் உலக தலை நகரமாக இந்தியா மாறியுள்ளது. இதில் 60% நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்பபாட்டில் வைத்திருப்பதில்லை. பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் எரிச்சல், மதமதப்பு, கால் வலி இருந்தால் கால் புண் உண்டாகும் வாய்ப்பு அதிகம். இதை சரி செய்ய முறையான சிகிச்சை அவசியம்.

உங்கள் கால்களை நீங்களே பரிசோதனை செய்து பாருங்கள்:

O கால் தோல் கறுப்பாக உள்ளதா? காலில் முடி உதிர்ந்துள்ளதா ?
O விரல் வைத்து அழுத்தினால் குழி உண்டாகிறதா ?
O விரல்கள் கோணையாக உள்ளதா?
O வளைந்து உருவம் மாறியுள்ளதா?
O விரல்களின் நகங்களில் நிறமாற்றம் உள்ளதா?
O நகத்தின் ஓரத்தில் அழுத்தினால் வலி உண்டாகிறதா ?
O கால் பாதத்தின் அடிப்பகுதியில் ஆணிக்கால் பித்த வெடிப்பு உள்ளதா?
O விரல்களின் இடையில் சேற்றுப்புண் உள்ளதா?
O காலில் ஏதோ ஒட்டி கொண்டிருப்பது போன்ற உணர்வு உள்ளதா?
O பஞ்சு மேல் நடப்பது போன்ற உணர்வு நடந்தால் ஊசி குத்துவது போன்ற உணர்வு உள்ளதா?
O செருப்பு தானாக கழன்றுவிடுகிறதா?
O செருப்பு இருக்கா இல்லையா என்று தெரியாத நிலை உள்ளதா?
O காலை தூங்கி எழுந்தவுடன் கால்களில் பயங்கர வலி உண்டாகிறதா?
O நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா?
O தூங்கும் போது கெண்டை பிடிக்கிறதா?

மேற்கண்ட விஷயங்கள் உங்கள் காலில் இருந்தால் உங்களுக்கு பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனையும் அவசியம்.

Multi Millet Mixes

சர்க்கரையை குறைக்கும் சிறுதானிய ரெடிமேட்
உணவு வகைகள்  CDF-ல் அறிமுகம்

சிறுதானியம் என்பது வரகு, திணை, சாமை, ராகி, குதிரைவாலி, கம்பு, பனிவரகு போன்றவை. இன்று பெரும்பாலான நோய்களுக்கு முக்கிய காரணம் அதிக மாவுசத்து, அதிலும் பாலிஷ் செய்யப்பட்ட, நார்சத்து நீக்கப்பட்ட அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட கோதுமையைத்தான் நாம் 90 % சாப்பிடுகிறோம். பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, கோதுமையில் 80 – 85 % மாவுசத்து மட்டுமே உள்ளது என்பதை சென்ற கட்டுரையில் பார்த்தோம். சிறுதானியங்களை பாலிஷ் செய்து சாப்பிடுவது நல்லதல்ல. உடனே வேக வேண்டும் என்பதற்காக அதை பாலிஷ் செய்துவிடுகின்றனர். இதனால் சர்க்கரை அதிகமாகும் இந்த கருத்தை மனதில் கொண்டு CDF கடந்த 2 வருடங்களாக மத்திய அரசின் உணவு ஆராய்ச்சி கூட வல்லுநர்களுடன் இணைந்து பல ஆய்வுகளை நடத்தி உடனடி சிறுதானிய இட்லி, உப்புமா, பொங்கல். மற்றும் அடை தோசை உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். சர்க்கரை நோய் சிகிச்சையில் இது ஒரு மைல்கல் என்றே கூறலாம். இந்த உணவுகளில் சிறுதானியங்களை மாவாக்காமல், அரைக்காமல், பயன்படுத்துவதால் சர்க்கரை அதிகமாவதில்லை. இவ்வகை உணவுகள் சர்க்கரையை குறைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரையை உயர்த்தும் திறன் குறைவு (Low glycemic Index) சுவையாக இருப்பதாக சாப்பிடுபவர்களும் கருத்து கூறியுள்ளனர்.

சிறுதானிய CDF ரெடிமிக்ஸ் உணவு சாப்பிட்டு சர்க்கரை பரிசோதனை செய்தால் குறைவாகவே உள்ளது. இந்த உணவு சாப்பிடுபவர்களுக்கு மருந்து மாத்திரைகளை குறைக்க மருத்துவ ஆலோசனை அவசியம். இந்த உணவு பாகெட்டுகள் CDF ஆர்.எஸ்.புரம், CDF மருதமலை, பொள்ளாச்சி, திருப்பூர், மையங்களில் முன் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதை பற்றிய சமையல் முறை விளக்கமும் CDF மருதமலை மருத்துவமனையில் தினமும் காலை 10 – 11 மணி வரை நடைபெறும். பாலிஷ் செய்யாத சிறுதானிங்கள் CDF மையங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

Search

+