நோயின் தன்மையை பொருத்தே சிகிச்சை 

நோயின் தன்மையை பொருத்தே சிகிச்சை

விளக்கம் அளிக்கிறது கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் (CDF)

 

சர்க்கரை நோய் பல குறைபாடுகளால் உண்டாகலாம். காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதே சிறந்த சிசிச்சை. சிலருக்கு கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறையலாம். பலருக்கு சுரக்கும் இன்சுலின் வேலை செய்யாமல் இருக்கலாம். சிலருக்கு கல்லீரலில்இருந்து அதிக சர்க்கரை உற்பத்தி ஆகலாம். சிலருக்கு உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சதைகளுக்குள் செல்ல முடியாமல் இரத்தத்தில் தங்கியிருக்கலாம். சில வகை சர்க்கரை நோய் இன்சுலின் எதிர்ப்பு ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால் உண்டாகலாம். சிலருக்கு கணையம் கெட்டுப் போவதால் உண்டாகலாம். எனவே காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதே பயன்தரும்.

இரத்தத்தில் சர்க்கரை 100 மிகி என்றால் ஒரு மாத்திரை, 200 மிகி இருந்தால் 2 மாத்திரை என்று தான் இன்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாத்திரைகளையே பிரதானமாக நம்பி அளிக்கப்படும் சிகிச்சை வெற்றிகரமாக அமையாது. உணவே முதல் மருந்தாக, உடற்பயிற்சியே முக்கியமானதாக அளிக்கப்படும் சிகிச்சையே பலன்தரும்.

சிலருக்கு மாத்திரை, சிலருக்கு இன்சுலின், சிலருக்கு இரண்டுமே தேவைப்படும். இதற்க்காகத்தான் CDF ல் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்துகிறோம். உங்களுக்கு பொருத்தமான மருந்து மாத்திரைகளை தேர்ந்தெடுக்க இது உதவும். உங்களுக்கு எந்த அளவு மாத்திரை என்பதையும் நாம் கண்டறியலாம். இதன் மூலமாக கட்டுப்படாத சர்க்கரையையும் 3 நாட்களில்  நாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

உங்களுக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு பாதிப்பு உள்ளதா என்பதையும் அறியலாம் பாதிப்புகளை தடுக்கலாம். சர்க்கரை நோயால் உடலில் உள்ள உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். இவற்றை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். 3 நாட்களில் தங்கியிருக்கும் போது சர்க்கரை நோயுடன் வாழ்வதற்கு உங்களுக்கு பயிற்சி அறிக்கப்படும்.

உணவுமுறையில் என்ன மாற்றம் செய்ய வேண்டும், உணவுமுறை சமைக்கும் செயல்முறை விளக்கம், உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம், கற்றுத்தரப்படுகிறது. CDF மருத்துவமனை மருதமலை அடிவாரத்தில் 7 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட தனி ரூம்கள், கிசி ரூம்கள், சூட் ரூம்கள், ஜெனரல் வார்டுகள் உள்ளது. பலர் மருத்துவமனைக்கு செல்வது விரும்புவதில்லை காரணம் பயம் மற்றும் அங்குள்ள சூழ்நிலையே காரணம். CDF ஒரு மருத்துவமனை போல் இல்லாமல் நீங்கள் சுற்றுலா வந்த உணர்வை அளிக்கிறது.

சர்க்கரை நோய் சிகிச்சையில் 28 ஆண்டுகள் அனுபவமுள்ள CDF தலைமை சர்க்கரை நோய் மருத்துவர் Dr.V. சேகர் அவர்களின் தலைமையில் பல்துறை சிறப்பு மருத்துவ குழுவினர், உணவியல் நிபுணர்கள், செவிலியிர்கள் அடங்கிய 30க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் உங்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். கோடை விடுமுறையில் ஆரோக்கிய சுற்றுலாவை மேற்க்கொள்ளலாம். இங்கு தங்கியிருக்கும் போது மருதமலை, பேரூர் கோயில், ஈஷா யோகா மையம், ஆலியார் போன்ற இடங்களுக்கு சென்று வரலாம்.

உங்கள் கால்களை காதலியுங்கள் :

உங்கள் கால்களை தினமும் நீங்களே பரிசோதனை செய்து பாருங்கள். கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மருத்துவ ஆலோசனையும் முறையான பரிசோதனைகளும் அவசியம்.

கால் எரிச்சல், மதமதப்பு, கால் வலி, உணர்வற்ற தன்மை, ஊசி குத்துவது போன்ற உணர்வு, கால் தோல் கறுப்பாக மாறுவது,  காலில் முடி உதிர்வது, விரல் வைத்து அழுத்தினால் குழி உண்டாவது,  விரல்கள் கோணையாக இருப்பது, வளைந்து உருவம் மாறுவது, விரல்களின் நகங்களில் நிறமாற்றம்,  நகத்தின் ஓரத்தில் அழுத்தினால் வலி உண்டாவது, கால் பாதத்தின் அடிப்பகுதியில் ஆணிக்கால் பித்த வெடிப்பு, விரல்களின் இடையில் சேற்றுப்புண், காலில் ஏதோ ஒட்டி கொண்டிருப்பது போன்ற உணர்வு, பஞ்சு மேல் நடப்பது போன்ற உணர்வு, செருப்பு தானாக கழன்றுவிடுவது,  செருப்பு இருக்கா இல்லையா என்று தெரியாத நிலை, காலை எழுந்தவுடன் கால்களில் பயங்கர வலி,  நடக்க முடியாமை,  துங்கும் போது கெண்டைபிடிப்பது போன்ற அறிகுறிகள்.

 

முழு உடல்  பரிசோதனை

சர்க்கரை நோய் உள்ளவர்கள்  முழு உடல் பரிசோதனை செய்வதன் மூலம் பின்விளைவுகளை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். மருத்துவர் ஆலோசனை பெற்று அவசியமுள்ள பரிசோதனைகளை மட்டும் செய்து கொள்ளலாம். ஒரு முறை  முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு தொடர் சிகிச்சையை திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, சேலம், ஈரோடு, சத்தி, கோபி, ஊட்டி  போன்ற கிளை மையங்களில் பெறலாம். மினி ஹெல்த் செக்கப், கால் பரிசோதனை முகாம் பொருத்தமான மாத்திரையை தேர்ந்தெடுக்கும் முகாமும் நடைபெறுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் மையத்திலும் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

  அதிக சர்க்கரை உள்ளவர்கள், சர்க்கரை அடிக்கடி ஏறி ஏறி  இறங்குபவர்கள், அடிக்கடி லோ சுகர் பிரச்சனை உள்ளவர்கள்,  முதல் வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள், கால் எரிச்சல், மதமதப்பு உள்ளவர்கள் கால் வலியால் நடக்கமுடியாதவர்கள், சர்க்கரை நோய் பின்விளைவுகள் உள்ளவர்கள், CDF ரிசார்ட் மருத்துவமனையில்  ஓய்வெடுத்து சிகிச்சை பெறுவது நல்லது

Search

+